Sunday, 17 September 2017

Aalamaana Aaliyilum Aalamaana Anbu - ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு

ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு 

Aalamaana Aaliyilum Aalamaana Anbu



                 ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
                 உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு
                 அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
                 விவரிக்க முடியாத அற்புத அன்பு

          இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
          புறம்பே தள்ளாத பூரண அன்பு
          இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு - 2

          1. குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு
              குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு
              ஒடுக்கப்பட்டோரை உயர்த்திடும் அன்பு
              எந்த காலத்திலும் மாறாத அன்பு
                                                                                      - இது ஒப்பில்லாத

          2. மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு
              மகனாய் ஏற்றுக்கொண்ட மகாப்பெரிய அன்பு
              என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
              தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு
                                                                                      - இது ஒப்பில்லாத 

No comments:

Post a Comment