Sunday, 17 September 2017

Aaviyaanavare Ummai Vaanjikkiraen - ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன்

ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன் 

Aaviyaanavare Ummai Vaanjikkiraen


                  ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன்
                  உந்தன் மகிமையின் பிரசன்னம்
                  நிறைவாய் இறங்கட்டும் இந்த வேளையிலே

             1. ஆவியிலே களிகூரவே என்றென்றும் விரும்புகிறேன்
                 வாஞ்சிக்கிறேன் எந்நாளுமே உந்தன் சமூகத்தையே
                 நேசர் முகம் காண்கையிலே ஆவியில் நிரம்புகிறேன்
                 பாடி உம்மை துதிக்கையில் பரவசம் கொள்ளுகிறேன்
                                                                                                           - ஆவியானவரே

            2. தாவீது போல் மகிழ்ந்திடவே சமூகம் வேண்டுகிறேன்
                ஆடிப்பாடி துதித்திடவே விடுதலை ஈந்திடுமே
                உன்னதத்தில் உம்முடனே உறவாட உதவிடுமே
                ஆவிக்குள்ளாய் அனுதினமும் அனல்வுணர்வூட்டிடுமே
                                                                                                         - ஆவியானவரே

           3. மேல்வீட்டறை அனுபவத்தை என்றென்றும் தந்திடுமே
               ஆவிமழை கரைபுரள தேசத்தை சந்தியுமே
               தேசமெல்லாம் அசைந்திடவே எழுப்பிடும் வாலிபரை
               எழுப்புதலால் புது உள்ளங்கள் உயிர்ப்பிக்க செய்திடுமே
                                                                                                        - ஆவியானவரே 

Aalamaana Aaliyilum Aalamaana Anbu - ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு

ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு 

Aalamaana Aaliyilum Aalamaana Anbu



                 ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
                 உயர்ந்த மலைகளிலும் உயரமான அன்பு
                 அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
                 விவரிக்க முடியாத அற்புத அன்பு

          இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்பு
          புறம்பே தள்ளாத பூரண அன்பு
          இது ஒப்பில்லாத அன்பு பூரண அன்பு - 2

          1. குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்பு
              குப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு
              ஒடுக்கப்பட்டோரை உயர்த்திடும் அன்பு
              எந்த காலத்திலும் மாறாத அன்பு
                                                                                      - இது ஒப்பில்லாத

          2. மனிதர்கள் மாறினாலும் மாறிடாத அன்பு
              மகனாய் ஏற்றுக்கொண்ட மகாப்பெரிய அன்பு
              என்னை மீட்பதற்காய் உலகத்திலே வந்து
              தன்னையே தந்துவிட்ட தகப்பனின் அன்பு
                                                                                      - இது ஒப்பில்லாத 

Devareer Neer Sagalamum Seiya Vallavar - தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
Devareer Neer Sagalamum Seiya Vallavar


          தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்
          தேவனே உமக்கொப்பான தேவன் யார்

          நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்
          நீர் செய்வதைத்  தடுப்பவன் யார் - தேவரீர்

         1. தரிசனம் தந்தவர் நீர் அல்லவோ
             தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே
             சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன் 
             சர்வ வல்லவர் நீர் தானே 
                                                                       - தேவரீர் நீர் 

         2. தடைகளை உடைப்பவர் நீர் தானே 
             தடுப்பவர் எவரும் இங்கில்லையே 
             கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன் 
             கன்மலையே உம்மை துதித்திடுவேன் 
                                                                        - தேவரீர் நீர் 

Thursday, 16 March 2017

Sarva Sristikkum Ejamaanan Neere - சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே - Lyrics in Tamil

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே



1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே 
    சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
    எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
    என்றென்றும் பணிந்து தொழுவோம்

          ஆஹா ஹா ஆ அல்லேலூயா(8) - ஆமேன்

2. வானம் பூமி ஒழிந்து போனாலும் 
    உம் வார்த்தை என்றும் மாறாதே
    உலகம் அழிந்து மறைந்து போம்
   விசுவாசி என்றென்றும் நிலைப்பான்

          ஆஹா ஹா ஆ அல்லேலூயா(8) - ஆமேன்

3. சாத்தான் உன்னை எதிர்த்த போதும்  
    ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே
    தோல்வி என்றும் உனக்கில்லையே
    துதிகானம் தொனித்து மகிழ்வாய்

          ஆஹா ஹா ஆ அல்லேலூயா(8) - ஆமேன்

4. எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே 
    என்னை காக்கும் கர்த்தரும் நீரே
    என்னை உனக்கு என்றும் அர்ப்பணித்தேன்
    என் வாழ்வில் ஜோதியும் நீரே

          ஆஹா ஹா ஆ அல்லேலூயா(8) - ஆமேன்